vallarai keerai uses
Vallarai Keerai Health Benefits and Uses in Tamil – வல்லாரைக் கீரை
Scientific name : centella asiatica
Kingdom : plantae
Family : Apiaceae
Genus : centella
Order : Apiales
Higher Classification : Pennywort
ஞாபக சக்தியைக் கொடுக்க, இதற்கு இணையாக ஒரு கீரை உலக அளவிலேயே கிடையாது என்று கூறலாம். வல்லாரை ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நிலப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளர்ந்து காணப்படும். வல்லாரையைச் சமையலுக்கு பயன்படுத்தும் போது புளியைச் சேர்க்க வேண்டாம். புளி வல்லாரையின் சக்தியைக் கெடுத்துவிடும். உப்பையும் பாதியாய் போடத்தான் சமைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு
வல்லாரையை நெய்யால் வதக்கி, சிறிதளவு இஞ்சி, இரண்டு பூண்டு கீற்றுகள், சேர்த்துத் துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வியாதிகள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியவைகள் எல்லாம் குணமாகும்.
மஞ்சள் பற்கள் பளீரென வெள்ளையாக:
பற்களில் பலருக்கு வண்ணம் படிந்து சிரித்தால் பார்ப்பவர் முகம் சுளிப்பார்கள். மஞ்சளைப் போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரைக் கீரையைப் பற்களின் மீது வைத்துத் தேய்ப்பதினால் மஞ்சள் போவதோடு, பற்கள் வெள்ளையாக பளீரிடும்.
அளவோடு உண்ணுதல்:
வல்லாரையை அளவோடு குறைந்த அளவுதான் சாப்பிட வேண்டும். அளவு மீறினால் மயக்கம் வரும். தலைச்சுற்றல் ஏற்படும். உடம்பை பிழிவதைப் போல் வலி ஏற்படும். எனவே இக்கீரையை அடிக்கடி உண்ணாமல் 10 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவதே நல்லது.
இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்
- ஆயுளைப் பெருக்கும் குறிப்பாக இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
- மூளை பலப்படும், மாலைக்கண் நோய் நிவர்த்தியாகும்
- கை, கால் வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்தும்
- வயிற்றுக் கடுப்பு நீங்கும்
- காய்ச்சலைப் போக்கும்
- முகத்திற்கு அழகைத் தரும்
- மாரடைப்பு வருவதைத் தடுக்கும், யானைக்கால் நோயை ஆரம்பத்திலேயே வராமல் தடுக்கும்
- பெண்களின் மாதாந்திரப் பிரச்சனைகளைத் தீர்க்கும்
மற்ற பயங்கள்
- வல்லாரைச் சாற்றுடன் பால் கலந்து தர காக்கை வலிப்பு தீரும்.
- அம்மை நோயைக் கட்டுப்படுத்துகின்றன தன்மை உடையது வல்லாரை.
- வல்லாரை இலை, அதிமதுரம், நெருஞ்சில் மூன்றையும் சூரணம் செய்து தர, சிறுநீர்பையில் தோன்றும் கல் நீங்கும்.
- வல்லாரை இலையை அரைத்து நாபியைச் சுற்றி பற்றிடக் குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி நீங்கும்.
- வல்லாரை இலை , துளசி இலை, மிளகு சேர்த்து குடிநீர் எல்லாம் வகைச் சுரங்களையும் போக்கும்.
- காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு வல்லாரை இலையை அரைத்து பசும்பாலில் கரைத்துக் குடித்து வர இரத்தம் சுத்தமாகும்.
- வல்லாரையை மட்டும் தொடர்ந்து கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய் கட்டுப்படும்.
- வல்லாரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு அதிகரிப்பது தடைப்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
- வல்லாரையைத் தொடந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள உப்புச்சத்தின்(Blood Urea) அளவு 10% குறைகிறது.
- வல்லாரை இலைச்சாறு, கீழா நெல்லி இலைச் சாறுடண் மோர் கலந்து ஐந்து நாட்கள் தர எல்லாவிதமான காமாலையும் குணமாகும்.
- வல்லாரைச் சாற்றுயும், அருகம்புல் சாற்றுயும் பசுந்தயிரில் கலந்து மூன்று வேளைத் தர வெள்ளை, வெட்டை, மேகம், நீர் எரிச்சல் குணமாகும்.
- வல்லாரைப் பொடியுடன் தேன், திப்பிலி பொடி கலந்து தர இருமல், இளைப்பு தீரும்.
- வல்லாரைச் சூரணம், பொடுதலை சூரணம்ப் இரண்டையும் சம அளவு கலந்து தர நீரிழிவு நோய் குணமாகும்.
- வல்லாரைச் சாற்றை பாலில் கலந்து 10 நாள் தர மூளைக்கு வலுவையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
- அழுக்காரா சூரணமும், வல்லாரைச் சூரணமும் கலந்து பாலில் கொடுத்துவர உடல் வலுவடையும்.
அருமையான தகவல்
ReplyDeletevery useful information
ReplyDeleteThe vallarai keerai photo in this article is not proper vallarai. This is different plant which is being sold as vallarai. Please google for proper photo.
ReplyDelete