Papaya uses

பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள பப்பாளி பழம் எங்கெங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமாகும். அது மட்டுமல்ல.. விலை குறைவாக கிடைக்கக் கூடிய பழங்களில் இதுவும் ஒன்று.

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.

பொதுவாக நமது உடலில் கழிவுகள் வெளியேறாமல் இருந்தால், அதுவே முக்கால்வாசி நோய்களின் வரவிற்கு வழிவகுக்கும். அந்த வகையில் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு பப்பாளி ஒரு நல்ல மருந்தாகும். வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி சிறந்த நிவாரணம் தரும்.

சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு இப்பழம் ஒரு அருமருந்து.

பப்பாளியில் உள்ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன்(Arginine) என்ற மூலப்பொருள் உள்ளது. அது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும். மேலும், ‘கார்பின்’ இருதயத்துக்கும் ‘ஃபைப்ரின்’ ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை அடிக்கடி கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு மற்றும் பல் வளர்ச்சியில் உறுதி ஏற்படும்.

கல்லீரல் கோளாறுகளை பப்பாளி பழம் சரிசெய்ய வல்லது.

தினமும் காலையில் பப்பாளிப்பழத்தை துண்டுகளாகவோ அல்லது ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி தோல் பளபளக்கும்.

உடல் எடை குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளிக்காயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வந்தாலும், எடை குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் வெந்நீரால் கழுவி வர முகச்சுருக்கம் மறைந்து முகம் அழகு பெறும்.

பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை முகப்பரு உள்ளவர்கள் தங்களது முகத்தில் மென்மையாக தேய்த்து வந்தால், பருக்களை போக்குவதோடு முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி பொலிவு கிடைக்கும்.

பப்பாளிப் பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பின் நிறைய பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும். காரணம், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. பப்பாளி கலந்த ஷேம்புக்களையும் பயன்படுத்தலாம்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

விதைகள் அதிகம் உள்ள நாட்டு பப்பாளி பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

குறிப்பு : கர்ப்பிணிப் பெண்கள் முதல் 2 மாதங்களுக்கு பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

vallarai keerai uses

Nithya kalyani flower uses.