பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள பப்பாளி பழம் எங்கெங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமாகும். அது மட்டுமல்ல.. விலை குறைவாக கிடைக்கக் கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. பொதுவாக நமது உடலில் கழிவுகள் வெளியேறாமல் இருந்தால், அதுவே முக்கால்வாசி நோய்களின் வரவிற்கு வழிவகுக்கும். அந்த வகையில் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு பப்பாளி ஒரு நல்ல மருந்தாகும். வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி சிறந்த நிவாரணம் தரும். சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு இப்பழம் ஒரு அருமருந்து. பப்பாளியில் உள்ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன்(Arginine) என்ற மூலப்பொருள் உள்ளது. அது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும். மேலும், ‘கார்பின்’ இருதயத்துக்கும் ‘ஃபைப்ரின்’ ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன. குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை அடிக்கடி கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு மற்றும் பல் வளர்ச்ச...